செய்துங்கநல்லூர் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் முகம்மது ஜாவித்& செய்தலி பாத்திமா தம்பதியினர். இவர்களுக்கு யாசிக் ரஹ்மான் என்ற 1 வயது 8மாத குழந்தை ஒன்றுள்ளது. தற்போது இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூரில் வசித்து வருகிறார். இந்த குழந்தை நடை பழகிய தருணத்தில் பல பொருள்களை அடையாளம் காட்டினான். குழந்தை வாகனங்கள், காட்டு விலங்குகள், செல்ல பிராணிகள்,பறவைகள், வீட்டு உபயோக பொருட்கள்,கடல் பிராணிகள், வடிவங்கள், பழங்கள் மற்றும் சில பொருட்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டறிதல் வகைக்கு இந்தியன் புக் ஆப் ரெக்காட்டு சாதனை புரிந்துள்ளார்.

இது குறித்து செய்தலி பாத்திமா கூறும் போது,
எனது மகன் ஒரு வயதை தாண்டி நடை பழகிய தருணத்தில் மிகவும் துறுதுறு எனவும் ஆர்வமுடனும் இருந்தான். புது புது பொருட்களைப் பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினான். அவனுக்கு விலங்குகள் பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவற்றை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவான். அதை அறிந்து கொண்ட நான் அவனுக்கு விலங்குகள் பறவைகள் பற்றிய கார்டுகளை வாங்கி சொல்லி கொடுக்க ஆரம்பித்தேன். அவனும் அதில் ஆர்வம் கொண்டு கற்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில் இரண்டு மூன்று என்று கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுத்தேன். ஒவ்வொரு விலங்குகளையும் பெயர் சொல்லி அதை எடுத்துத்தா என்று கேட்கவும் அவன் எடுத்து தர ஆரம்பித்தான். அவன் சரியாக எடுத்து தருகிற பிறகு நான் வெரி குட் என்று அவனை பாராட்டுவேன் .அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்து. அதன் காரணமாகவே மேலும் கற்க ஆசைப்பட்டான். ஒவ்வொரு நாள் இரவும் தூங்க போவதற்கு முன் அவனுக்கு நான் சொல்லி கொடுப்பேன். நான் சில நாள் இன்றைக்கு சொல்லி கொடுக்க வேண்டாமென்று நினைத்தாலும் அவன் புக் இருக்கும் இடத்தில் நின்று கொண்டு அவன் பாசையில் அதை எடுத்து கேட்பான். எடுத்து கொடுக்கும் வரை இடத்தை விட்டு நகர மாட்டான். இதனின் அடுத்த கட்டமாக விலங்குகள் பறவைகளின் ஒலிகளை ஒலி எழுப்ப ஆரம்பித்தான். காகம் எப்படி கத்தும் லயன் எப்படி கத்தும் என்று கேட்டால் அதேபோல் கத்தி காட்டுவான். பிறகு வீட்டில் அவனுக்கு தெரியாத பொருள் ஏதாவது இருந்தால் அதை என்னிடம் எடுத்துக் கொண்டு வந்து அம்மா என்று அதை குறிப்பிட்டு காட்டுவான். அவன் என்ன கேட்கிறான் என்பதை புரிந்து கொண்ட நான் அவன் கையில் வைத்திருக்கும் பொருளின் பெயரை கூறிய பிறகு நான் கூறியதைப் போல் கூற முயற்சி செய்து விட்டு அந்த இடத்தை விட்டு அடுத்த பொருளை தேடி செல்வான். இப்படி ஒவ்வொரு நாளும் அவனுடைய ஆர்வம் கூடிக்கொண்டே போனது. அவனிடம் நான் கேட்க கேட்க அவன் சரியாக சொல்வதெல்லாம் வீடியோ எடுத்த வைத்திருந்தேன். அதை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு இருக்கு அனுப்பி வைத்தேன். அதனாலே அவன் அச்சீவர் ரெக்கார்ட் பெற்றான். அவன் கூறும் சில விஷயங்கள் வீடியோக்களில் உள்ளது இன்னும் சில விஷயங்கள் வீடியோ எடுக்க இயலவில்லை. என்று கூறினார்.
குழந்தை யாசிக் மேலும் பல சாதனைகள் புரிய செய்துங்கநல்லூர் மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.


