குமரிக் கடலில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வெள்ளிவிழா காண்பதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டித் தேர்வு நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
குமரிக் கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு தமிழ் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கிடையேயான கட்டுரைப் போட்டித் தேர்வு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் வட்டார அளவிலான கட்டுரைப் போட்டித் தேர்வில் அய்யன் திருவள்ளுவரின் அடி தொடர சூளுரைப்போம்,எனக்குப் பிடித்த திருக்குறள் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் கட்டுரை எழுதும் வகையில் போட்டிகள் நடைபெற்றது.
இத் தேர்வை நாசரேத் மர்காஷிஸ் பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.தமிழ் ஆசிரியர் ஆபிரகாம் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். அம்புரோஸ் சுகிர்தராஜ் அனைவரையும் வரவேற்றார். வின்ஸ்டன் ஜோஸ்வா போட்டிகளுக்கான விதிமுறைகளை விரிவாக மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.
இப்போட்டித் தேர்வில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி, புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்திருநகரிஇந்து மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் எஸ் எஸ் என் மேல்நிலைப்பள்ளி, நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சார்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இத் தேர்வை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர்கள் எட்வின் செல்வம் ஜெபசீலி, ரூபி பொற்செல்வி ஆகியோர் நடத்தினார்கள். தேர்வுக்கான ஏற்பாடுகளை நாசரேத் பள்ளித் தாளாளர் சுதாகர் ஆலோசனையின் பேரில் தலைமை ஆசிரியர் குணசீலராஜ், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.


