சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் மாணவ மாணவியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார்.
மேலும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள போதை தடுப்பு குழுக்கள் சேர்ந்த மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் போதை தடுப்பு செயல் திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும். மேலுமபோதைப் பொருட்கள் குறித்த தகவல்களை 10581 என்ற எண்ணில் அளிக்கலாம் என அவர் கூறினார்.
கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள் விஜயலட்சுமி, ஜேஸ்பர்லின், செல்வரதி, ஆனந்தி, ஜாக்சன், டென்னிசன், ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


