தூத்துக்குடி டி. சவேரியார்புரம் தூய சவேரியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி டி. சவேரியார்புரம் தூய சவேரியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 136வது ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன், சவேரியாா்புரம் பங்குதந்தை குழந்தைராஜன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.
தொடா்ந்து முதல்நாள் திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. தருவைக்குளம் பங்கு தந்தை வின்சென்ட் மறையுரையாற்றினாா். அதனை தெடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும். 7 ஆம் திருவிழா 30ஆம் தேதி சனிக்கிழமை இரவு புனித சவேரியாரின் சப்பர பவனி நடைபெறும்.
9 ஆம் திருவிழாவான திங்கள்கிழமை மாலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை பவனி நடைபெறும். 10 ஆம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை குழந்தை ராஜன், அருள் சகோதரிகள் மற்றும் ஊர் நிர்வாகிகள் பங்கு இறைமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


