தூத்துக்குடியில் கே.சின்னத்துரை அன்கோ சார்பில் நடைபெறும் குழந்தைகள் தினவிழா ஓவியப் போட்டியில் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
தென் தமிழக மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி மற்றும் நகை விற்பனை நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ தங்க மாளிகை, திருச்செந்தூர், ஏரல், தூத்துக்குடி மற்றும் சென்னை செம்பாக்கத்தில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி தமிழ்ச்சாலையில் இயங்கி வரும் கே.சின்னத்துரை அன்கோ சார்பில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 1, 2, மற்றும் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கையின் வண்ணம், வண்ண பறவைகள், சிந்தனை பேசும் சித்திரம் ஆகிய தலைப்புகளிலும், 4, 5, மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு என் சுற்றுப்புறம் என் பொறுப்பு, வளர்ச்சி இந்தியா, உலகம் போற்றும் எங்கள் கலாச்சாரம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஓவியப் போட்டியில் சுமார் 2ஆயிரம் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் குழந்தைகள் தங்களது கைவண்ணத்தை வரைந்து குடும்பத்துடன் கே.சின்னத்துரை அன் கோ வருகைபுரிந்து நிறுவன பங்குதாரர் அரி.ராமகிருஷ்ணனிடம் வழங்கி வருகின்றனர். இந்த போட்டியின் பரிசளிப்பு விழா வருகிற 25ஆம் தேதி தூத்துக்குடி கே.எஸ்.பி.எஸ்., திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


