தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியில் வடிகால் மற்றும் சாலை பணிகள் தொடங்குவது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அழகேசபுரம் பகுதியில் சில இடங்களில் வடிகால்கள் தூர்ந்து போய் இருப்பதாகவும் சில இடங்களில் புதிய சாலை மற்றும் வடிகால்கள் வசதி வேண்டி வந்த மக்களின் கோரிக்கையினையடுத்து அந்த பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வரும் நாட்களில் தூர்வாரப்படும் என்றும் வடிகால் மற்றும் சாலை பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார். ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினர் ஜான்சி ராணி, வட்ட பிரதிநிதிகள் மூக்கையா, செல்வராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


