தூத்துக்குடியில் சாலைகளில் திரியும் மாடுகளை அடைப்பதற்கான கொட்டகை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதால் பொது மக்கள் தங்களது கால்நடைகளை பொது இடங்களில் சுற்றி திரிய விடாமல் அவரவர் வீட்டில் பராமரித்திட வேண்டும், தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொது மக்களுக்கும், மாணவ மாணவியர்க்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் திரியக்கூடிய மாடுகளை பிடித்து அவைகளை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டும் வரும் கொட்டகை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


