தூத்துக்குடி துறைமுகத்தில் ஊதிய உயர்வு கோரி சிகால் பன்னாட்டு பெட்டக நிறுவன பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்துள்னர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் PSA SICAL பன்னாட்டு பெட்டக நிறுவனம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்ற பணப்பலன்கள் ஏதும் வழங்காமல் இழுத்தடிப்பதைை கண்டித்து தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு ரிப்பணை கையில் கட்டிக் கொண்டும் இன்று இன்று பணிக்கு வந்துள்ளனர். உடனடியாக நிர்வாகம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


