தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் வடிகால் தூர்வாரும் பணிகள் தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியின் சில இடங்களில் வடிகால்கள் தூர்ந்து போய் இருப்பதாக வந்த பொது மக்களின் கோரிக்கையினையடுத்து அப்பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்து, தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது அந்த பகுதிகளில் நடைபெற்ற வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


