தூத்துக்குடி சிவன் கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கம் சார்பில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் துவங்கியது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 7ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4.35 மணிக்கு வேல் வாங்குதல், பின்னர் 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. நவ.8ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


