பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 117 வது ஜெயந்தி விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் தலைமையில் 117 பேர் தாமிரபரணி ஆற்றின் அணைப்பகுதியில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சிலம்பம், சுருள்வாள் சுற்றி வந்து மேள தாளம் முழங்க வந்து முத்துராமலிங்க தேவர் முழு உருவ வெண்கல சிலைக்கு அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைப் போன்று, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் சித்ராங்கதன் தலைமையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


