தூத்துக்குடியில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆப் பியல் சிட்டி, ஜெசிஐ ஹெர்குலேனியம் எலைட் மற்றும் போலியோவால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் இணைந்து நடத்திய போலியோ தின விழிப்புணர்வு தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை நடைபெற்றது. இப்பேரணியை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர் கோடியசைத்து துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி பால சுப்பிரமணியம், தலைவர் செல்வராஜேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து காெண்டனர்.
திருநெல்வேலி கேடிசி நகரில் திருநெல்வேலி வெஸ்ட் கிளப் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சிவா மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டை கிளப் தலைவர் சாமுவேல் செயலாளர் சுந்தர், பேரணியை வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் மீரான் கான் சலீம், கௌரவ விருந்தினராக முந்தைய மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் முத்தையா பிள்ளை, உதவி ஆளுனர் சொக்கலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்பு பாளையங்கோட்டை மதுரம் உணவகத்தில் வைத்து அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரோட்டரி பியல் சிட்டி சங்கத்தின் தலைவர் விக்னேஷ், செயலாளர் விக்டர், உதவி ஆளுனர் கண்ணன், கிருஷ்ணசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து சிறப்புடன் செய்திருந்தனர்.


