தென்சிதம்பரம் என அழைக்கப்படும் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிசேகத்தினையொட்டி திருப்பணி தொடக்க விழா வருகிற 28 ந்தேதி காலை 9 மணிக்கு துவங்க உள்ளது. பெருங்குளம் செங்கோல் மட ஆதீனம் 103 வது குரு மகா சன்னிதானம்தலைமை தாங்க உள்ளார்.
இதையொட்டி காலையில் 7 மணிக்கு சுவாமி அம்பாள் சிறப்பு அபிசேகம், பிரார்த்னை பூஜை, தீபாராதனையை தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை , புன்யாகவாசனம், வாஸ் பூஜை 9 மணி முதல் 10.10 மணிக்குள் நாள் செங்கல் வைத்தல் போன்ற பூஜைகள் நடைபெறு உள்ளது. ஆலய ஆய்வாளர் நம்பி உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர். பூஜை ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் முத்துராமன் தலைமையில் அர்ச்சகர்கள் செய்து வருகிறார்கள். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் மாரியப்பன் தலைமையில் ஸ்ரீபதஞ்சலி வியாக்கர பாதீ ஸ்வரர் ஆன்மீகப்பேரவையினர் செய்து வருகின்றனர்.


