தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் நினைவு புத்தகம் வழங்கி வரவேற்றார். இதில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.


