தூத்துக்குடியில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு முகாமினை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பதிவு செய்த பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வழங்கினார்.
இதில், வட்டாட்சியர் முரளிதரன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், நிர்மல் ராஜ், வட்டச் செயலாளர்கள் செந்தில்குமார், கந்தசாமி, மாமன்ற உறுப்பினர்கள் அதிர்ஷ்ட மணி, வைதேகி பலவேசமுத்து, மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


