அருங்காட்சியத்தில் காட்டிய திரைப்படம் மிகப் பிரமாண்டமாக இருந்தது.?
அங்கு சிறிய திரையரங்குத்தான் உள்ளது. நவீனவசதி கொண்டது. சுமார் 50 பேர்தான் அமர்ந்து பார்க்க இயலும். ஹெக்டெக் முறையில் அந்த தியேட்டர் அருங்காட்சியகத் துக்குள் அமைந்து இருந்தது.
திரைப்படத்தினை பார்க்கும் போது நாங்கள் குவைத்தில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சண்டையை காண முடிந்தது.
நிறைய வளங்கள் கொண்ட நாட்டிற்கு ஆபத்து வருவது இயற்கைதான். குவைத்திற்கு அண்டைய நாடான ஈராக்கினால் ஆபத்து வந்தது.
அந்த வரலாறு மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. ஈராக் தன் பேராசையால் குவைத்தை பிடிக்கத் திட்டமிட்டது.
திட்டமிட்டே குவைத்தின் மேல் படை எடுத்தனர். குவைத்தின் எண்ணெய் கிணறுகளில் தீவைத்தனர். இதனால் குவைத் நாடு தீப் பற்றி எரிந்தது. எங்கும் புகை மண்டலம். கடல் நீர்நிலைகள் மண்டலங்கள் எல்லாம் பாழாயின. குவைத்திற்கு பல கோடான கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்தக் கொடுமையான நிகழ்வுகள் அத்தனையையும் குறும்படமாகப் போட்டுக் காட்டினார்கள். கச்சா எண்ணை எரியும்போது வெப்பம் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதைப் புரியவைக்கக் கச்சா எண்ணெய்யை அவ்வப்போது எரிந்தும் காட்டினார்கள்.
பார்க்க நெஞ்சம் பதைபதைத்தது. கண்கள் பனித்தன.
எரிந்து கொண்டிருக்கும் எரிவாயு மையங்கள் மற்றும் எண்ணெய்க் கிணறுகளைக் குவைத் எப்படி மீட்டெடுத்து என்பதை படமிட்டுக் காட்டினர். இந்த வேளையில் தன்னலம் பாராது உழைத்தவர்களை குவைத் உளமார பாராட்டுகிறது. இந்த தியாகச் செயலில் தமிழ் பொறியாளர்களும் பணியாற்றினார்கள் என்பது நமக்கு பெருமைதானே.
பின்னர் “குவைத் எப்படி வளர்ந்தது?” என அந்த குறும்படத்தில் விளக்கினார்கள்.
வளைகுடாப் போர் என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும். இந்தப் போர் முதலாம் வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் அல்லது பாலைவனப் புயல் படை நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது
ஈராக் 2 ஆகஸ்ட் 1990 அன்று குவைத் நாட்டை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டதை அடுத்து, ஈராக்கியப் படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளிலும் போர் நடந்தது. குவைத் மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் தன் நாட்டுப் படைகளை சவுதி அரேபியாவில் நிறுத்தி மற்ற நாட்டுகளும் தங்களது படைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பல நாடுகளும் அமெரிக்கா தலைமையிலானக் கூட்டுப் படையில் இணைந்தன. அவற்றில் சவுதி அரேபியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளே பெரும் பங்கு வகித்தன. மொத்தச் செலவான 60 பில்லியன் அமெரிக்க டாலரில் 40 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை சவுதி அரேபியா செலுத்தியது. இந்தப் போரில் வான்வழித் தாக்குதல் 17 சனவரி 1991 அன்றும் தொடர்ந்து தரைவழித் தாக்குதல் 23 பிப்ரவரி 1991 அன்றும் தொடங்கியது.
குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டி அடித்த கூட்டுப் படையினர் ஈராக் நிலப்பகுதிக்குள் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய 100 மணி நேரத்துக்குள் கூட்டுப் படையினர் வெற்றி பெற்று போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
ஈராக்கின் குவைத், சவுதி அரேபிய எல்லை பகுதிகளில் வான்வழி மற்றும் தரை போர் நடவடிக்கைகள் தீவிரமாக நிகழ்ந்தது. இதற்குப் பதிலடியாக ஈராக் சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுக்கு பகுதியில் இருந்த கூட்டணி இராணுவ முகாம்களை நோக்கி விரைவு ஏவுகணைகளை அனுப்பியது. ஏப்ரல் 1991 இல் இயற்றப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 687 தீர்மானத்தின் படி போர்நிறுத்த உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானங்களை செயல்படுத்து வதில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக்கிய போர் வெடித்தது.
அமெரிக்க செய்தி தொலைகாட்சியான சி.என்.என் இப்போரின் முக்கிய நிகழ்வுகளை போர் நடக்கும் இடங்களுக்கே சென்று நேரடி ஒளிபரப்பு செய்தது. இது அக்காலத்தில் முதல் முயற்சியாகும். இப்போர் முடிவடைந்த பின்னர் டெசர்ட் ஸ்ட்ரோம் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு ஒரு கன்னி விளையாட்டு உருவாக்கப்பட்டது. இதனால் இப்போர் காணொளி விளையாட்டுப் போர் (ஸ்வீபீமீஷீ ரீணீனீமீ ஷ்ணீக்ஷீ) என அழைக்கப்படுகிறது.
அமெரிக்க தாக்குதல் 3 முக்கிய பரவல்களை கொண்டிருந்தது. அவை 2 ஆகஸ்ட் 1990 முதல், 1991 ஜனவரி 16 வரை சவுதி அரேபியா பாதுகாப்பு 1991 ஜனவரி 17 முதல் 1991 ஏப்ரல் 11 வரையான காலகட்டத்தில் குவைத் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விடுதலை 1991 ஏப்ரல் 12 முதல் 1995 நவம்பர் 30 வரை தென்மேற்கு ஆசிய போர்நிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்பட்டு அமைதி நிலை நிறுத்தப்பட்டது.
சதாம் உசேனை பற்றிய குறிப்பையும் இந்த அறிய வேண்டியதுள்ளது.
சதாம் உசேன் ஈராக் நாட்டின் முன்னாள் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979 ல் இருந்து ஏப்ரல் 7 2005 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.
ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968இல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.
அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தினார். ஈரான் & ஈராக் போர் (1980&1988) மற்றும் குவைத் போர் (1991) நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்கால கட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.
மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.
குவைத்தில் சண்டையிட்ட சதாம் உசேன் மறைவும் வரலாற்று பதிவாகிவிட்டது. குவைத் மக்களின் கஷ்டங்களை இந்த திரைப்படத்தில் பார்வையிட்ட போது, அதற்கு காரணமானவர் முடிவும் நம் கண் முன் வந்து நின்றது.
மிகவும் சந்தோசமாய் இந்த அருங்காட்சியகத்தினை பார்வையிட்ட நாம், வெளியே வரும் போது மௌனமாகவே வெளியே வந்தோம்.
இந்த இடத்தில் பொறியாளர் சுப்பிரமணியன் கூறிய பதிவு ஒன்றை குறிப்பிட வேண்டும். குவைத் போர் நடந்து கொண்டிருக்கும் போது நமது இந்தியர்கள் உயிர் தப்பினால் போதும் என தரை வழியாக காரில் இந்தியாவுக்கு கிளம்பினர். அவர்கள் குவைத்தில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக நமது நாட்டுக்கு வரமுயற்சிசெய்தனர். அந்த வேளையில் இந்தியர்கள் காரில் வந்தால் வழி நெடுக இருந்த பெட்ரோல் பல்கில் இலவசமாக இவர்களுக்கு எரிபொருள் நிரப்பி கொடுத்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் இவர்களுக்கு உணவு உள்பட பொருள்களை வழங்கி யுள்ளார்கள்.
இந்த தகவல் இந்தியர்களுக்கு உலக மக்கள் தரும் அங்கீகாரம் புரிந்தது. இந்தியர்களில் பெரும்பான் மையானவர்கள் தமிழர்கள் என்றும் பெருமை பட்டுக்கொண்டார் அவர்.
இந்த தகவலை அசைப்போட்டுக்கொண்டே காரில் ஏறினோம்.
அப்போது டாக்டர் சுதாகர் அவர்களின் அலைபேசி சிணுங்கியது.
எடுத்துப் பேசினார்.
எதிர் முனையில் “சார் சனிக்கிழமை தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்கம் நடத்தும் மகளிருக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா?” என ஒரு பெண் கேட்டார்.
“இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்கனவே பதிவு செய்த ஜிணிதி உறுப்பினருக்கு மட்டும்தான். அதனால் முடியாது” எனச் சாமுவேல் பதிலளிக்கச் சொன்னார்.
அதையே முனைவர் சுதாகர் அவர்களும் கூறினார்.
“சரி குவைத்தில் இவருக்கு ஏன் போன் வருகிறது?”
அசோக் அவர்கள் டாக்டர் சுதாகர் அவர்களிடம் கொடுத்த சிம்கார்டு ஜிணிதி அமைப்பினுடையது. இந்தத் தொலைப்பேசி எண் ஜிணிதி இணையத்தில் உள்ளது.
அதனால்தான் அவருக்குத் தொலைப்பேசி அழைப்புகள் வந்தபடி இருந்தது .
இதிலும் நமக்கு சந்தோசம் தான். நாம் கலந்துகொண்டு பேசும் நிகழ்வுக்கு குவைத் தமிழர்களிடம் எத்தனை வரவேற்பு என்று நினைக்கும் போது சந்தோசமாக இருந்தது.
இதை நினைக்கும் போது கடல் கடந்து தமிழ் எப்படி போற்றப்படுகிறது என நினைத்து சந்தோசமடைந்தோம்.
குவைத் மக்கள் ஆர்வத்தினை நாம் பார்க்கும் போது, நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நாங்களும் ஆர்வத்தோடு எதிர்நோக்கியிருந்தோம்.
அருங்காட்சியகத்தில் இருந்து கார் வெளியே வந்தது. எங்களை தங்கப் பனை தொழில் அதிபரும், டாக்டர் சுதாகர் அவர்களின் நண்பருமான பலவேச முத்து அய்யா தனது அலுவலகத்துக்கு அழைத்து வரக்கூறியிருந்தார்.
காரை சாமுவேல் அவரது கம்பேனியை நோக்கி ஓட்டினார்.
சிறிது நேரத்தில் தொழில் அதிபர் பலவேசமுத்தின் தங்கப்பனை அலுவலகம் வந்து சேர்ந்தோம். அங்கு வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அதிலும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டக்காரர்கள்.
இந்த நிறுவனம் உலகெங்கும் உள்ள பல்வேறு கருவிகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துவருகிறார்கள்.
அவர் அலுவலகத்தில் நாம் அமர்ந்து இருக்கும் போது, நாம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் அல்லது திருப்பூரில் இருப்பது போலவே அறிந்தேன்.
இந்த கம்பேனியின் அதிபர் பலவேச முத்து அய்யாவை காண அவரது அறையில் காத்திருந்தோம்.
( குவைத்தில்தொடர்ந்து பயணிப்போம்)


