தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் வனத்துறை தூத்துக்குடி வனக்கோட்டம் சார்பில் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பசுமைத் தமிழக இயக்க நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் உரையாற்றி மரக்கன்றுகளை நடுவை செய்தார்.
இந்நிகழ்வில் மேயர்ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட வன அலுவலர்ரேவதி ரமன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வருவாய் கோட்டாட்சியர்பிரபு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


