திருச்செந்தூர்-சென்னை இடையேயான செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் இன்று மாற்றப்பட்டு உள்ளது.
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கமாக திருச்செந்தூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும். இந்த நிலையில் திருச்சி மண்டலத்தில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


