உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் தூத்துக்குடி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கள ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி வட்டம், பேரூரணி ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 363 ஊரக கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய நீர்த்தேக்கத் தொட்டியுடன் கூடிய மோட்டர் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளதையும், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் சார்பில் 4 முதல் 8 மாத கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி வழங்கும் முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
மேலும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நெடுஞ்சாலைகள் துறை- நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பேரூரணி முதல் மேலதட்டப்பாறை வரை செல்லும் சாலையில் ரூ.279 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், பேரூரணி முதல் மேலதட்டப்பாறை சாலை வரை ரூ.284.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பேரூரணி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கூட்டுடன்காடு ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியில் இருந்து ரூ.13.14 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வரும் நியாய விலைக் கடையின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, கூட்டுடன்காடு ஊராட்சி மங்களகிரி கிராமத்தில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வரும் 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு, மேலதட்டப்பாறை ஊராட்சியில் கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம் மூலம் உப்பாத்து ஓடை தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
பின்னர், புதுக்கோட்டை T.D.T.A PSP மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கு தேவையான பொருட்களின் இருப்பு குறித்த பதிவேட்டினை பார்வையிட்டு, மாணவியர்களுகளுடன்; கலந்துறையாடிய பின்னர், அப்பள்ளியில் உள்ள நூலகத்தினை பார்வையிட்டார்.
தொடர்ந்து, சிறுப்பாடு கிராமத்தில் வெள்ளத்தால் சேதமடைந்து வீடு தற்போது ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிதாக கட்டப்பட்டு வருவதையும், குமாரகிரி ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் விவசாய நுண்ணீர் பாசனத் திட்டம் 2024-25 கீழ் பயனடைந்த விவசாயி சுந்தரவேல் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை பார்வையிட்டு அங்கு பயிலும் மாணவர்களுக்கு எடுக்கப்படும் பாடகங்கள் குறித்து கேட்டறிந்த பின் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் தங்களது துறைகளின் மூலம் தூத்துக்குடி வட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், கீழ் தாமிரபரணி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், பானு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


