கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர்பார்வதிநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கிருஷ்ஜோதி, கருங்குளம் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ரதி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
இம் முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது,மூக்கு,தொண்டை, தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்றா நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் பாலகண்ணன் நன்றி கூறினார்.
இந்த முகாமில், பல் மருத்துவர் டாக்டர்.ஜெயவாணி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா, அருட் தந்தை ஜாக்சன், ஊராட்சி செயலர் சங்கரபாண்டியன், டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளையின் சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவம், கிராம வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், செல்வி, செல்வராணி, மக்களை தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர், ஆய்வகநுட்பனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
ஏற்பாடுகளை கருங்குளம் அரசு ஆர்மப சுகாதார நிலையம் மற்றும் டி.வி.எஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையினர் ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


