தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் 1000 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் காமராஜர் திருமண மண்டபத்தில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 122வது பிறந்தநாள் மற்றும் பசுமை புரட்சி காமராஜர் இயக்கத்தின் 3ஆம் ஆண்டு விழா, முன்னாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின் 9ஆம் ஆண்டு நினைவு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவினை மாநிலத் துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநகர மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் முன்னிலையில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எலிசபெத் ராஜன் நலதிட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக தெற்கு மண்டல தலைவர் மற்றும் பசுமை புரட்சி காமராஜர் இயக்கம் நிறுவனர் ராஜன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


