வல்லநாடு தம்பிராட்டி அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடந்தது.
வல்லநாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற தம்பிராட்டி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. இறுதி நாளில் மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, குதிரை மாட்டு வண்டி என மூன்று பிரிவாக போட்டி நடந்தது. வல்லநாட்டில் இருந்து மணக்கரை வரை போட்டி நடந்தது.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வேலங்குளம் கண்ணன் வண்டியும், இரண்டாவது பரிசை வல்லநாடு சிவபார்வதி, மூன்றாவது பரிசை வடக்கு காரசேரி ஒட்டக்காரன் வண்டியும் பெற்றனர். வேலங்குளம் கண்ணன் முதல் கொடியை பெற்றார்.
சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை வடக்கு காரசேரி ஒட்டக்காரன், இரண்டாவது பரிசை வல்லநாடு சிவபார்வதி, மூன்றாவது பரிசை மூலக்கரை கணபதி தேவர் வண்டியும், முதல் கொடியை வடக்கு காரசேரி ஒட்டக்காரன் வண்டி பெற்றது.
குதிரை வண்டி போட்டியில் முதல் பரிசை வல்லநாடு அன்னலட்சுமி வண்டியும், இரண்டாம் பரிசை வல்லநாடு அன்னலட்சுமியும், மூன்றாம் பரிசை நெல்லை டவுண் வண்டியும் பெற்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை முறப்பநாடு போலிசார் செய்திருந்தனர்.


