கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் விட்டிலாபுரம் ஊராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடந்தது.
விட்டிலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பசுபதி தலைமை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கிருஷ்ஜோதி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார் ஆகியார்கள் முன்னிலை வகித்தனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன்வரவேற்றார்.
டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குனர்கள் விஜயகுமார், பாபு ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்
இம் முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது,மூக்கு,தொண்டை, தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்றா நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் பாலகண்ணன்நன்றி கூறினார்.
இந்த முகாமில், சித்த மருத்துவ மருந்தாளுநர் வெங்கடேசன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா, மக்களை தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள்,
கிராம சுகாதார செவிலியர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர், ஆய்வகநுட்பனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளையின் கிராம வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்ரமணியன், செல்வி, கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் ரமேஷ், மருத்துவ அலுவலர் அஜீமா தஹ்ஸீன், நாட்டு நலப் பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
ஏற்பாடுகளை வல்லநாடு அரசு ஆர்மப சுகாதார நிலையம் டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளையினர் இணைந்து செய்திருந்தார்கள்.


