தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற உள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் கொண்டு சேர்க்கும் வண்ணம் நடைமுறைப்படுத்தப்படும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் 11.07.2024 அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் வாரங்களில் இம்முகாம்கள் கீழ்க்கண்டவாறு தினசரி முற்பகல் 09.00 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
முகாம் நடத்தப்படும் நாள், இடம் மற்றும் பயனடையும் கிராம ஊராட்சிகள் விபரம் வருமாறு:
1-01.08.2024: கயத்தார்-பொன்னுசாமி நாடார் மணிமண்டபம், செட்டிக்குறிச்சி-செட்டிக்குறிச்சி, திருமங்கலக்குறிச்சி, வெள்ளாளன் கோட்டை, சிதம்பரம்பட்டி, கட்டலாங்குளம்
2-01.08.2024: கோவில்பட்டி-கம்மவர் மஹால், கீழ ஈரால்-கீழ ஈரால், மஞ்சநாயக்கன் பட்டி, டி. சண்முகபுரம், மேல ஈரால், செமபுதூர்
3-01.08.2024: ஓட்டப்பிடாரம்-ஆர்.சி. துவக்கப்பள்ளி, மணியாச்சி-மணியாச்சி, மேலபாண்டியாபுரம், பாறைக்குட்டம், கொல்லங்கிணறு, ஒட்டநத்தம்
4: 02.08.2024: கயத்தார்-சமுதாய நலக்கூடம், ராஜாபுதுக்குடி-ராஜாபுதுக்குடி, பன்னீர்குளம், தெற்கு மயிலோடை, சன்ன புதுக்குடி
5-02.08.2024: ஓட்டப்பிடாரம்-சமுதாய நலக்கூடம், இளவேலங்கால்-இளவேலங்கால், தென்னம்பட்டி, ஓனமாகுளம், கொத்தாளி, மலைப்பட்டி
6-02.08.2024: விளாத்திகுளம்-இந்து நாடார் நடுநிலைப்பள்ளி, குளத்தூர்-குளத்தூர், வீரபாண்டியாபுரம், டி. சுப்பையாபுரம், வைப்பார், கீழவைப்பார், புளியன்குளம், பூசனூர், வேடப்பட்டி, விருசம்பட்டி
7-06.08.2024: கோவில்பட்டி-சமுதாய நலக்கூடம், சிதம்பராபுரம்-சிதம்பராபுரம், இளம்புவனம், சுரைக்காய்பட்டி, ஈராட்சி
8-06.08.2024: திருச்செந்தூர்-பஞ்சாயத்து அலுவலக் கட்டிடம், வீரபாண்டியன் பட்டிணம்-வீரபாண்டியன் பட்டிணம் (நகரம்), வீரபாண்டியன் பட்டிணம் (ஊரகம்)
9-06.08.2024: கயத்தார்-சமுதாய நலக்கூடம், தெற்கு பொம்மையாபுரம்-போடுபட்டி, தொட்டாம்பட்டி, புங்கவர் நத்தம், சோழாபுரம், கன்னக்கட்டை
10-07.08.2024: ஓட்டப்பிடாரம்-பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை அருகிலுள்ள கலையரங்கம், பாஞ்சாலங்குறிச்சி-ஓட்டப்பிடாரம், பாஞ்சாலங்குறிச்சி, கவர்னகிரி, வெள்ளாரம், குமாரெட்டியாபுரம், கே. தளவாய் புரம், அகிலாண்டபுரம்
11-07.08.2024: விளாத்திகுளம்-சமுதாய நலக்கூடம், மேற்கு தெரு, பிள்ளையார் நத்தம்-பிள்ளையார் நத்தம், தலைக்காட்டுபுரம், படர்ந்தபுளி, நீராவி புதுப்பட்டி, ராமனூத்து, சித்தவநாயக்கன்பட்டி, வேலிடுபட்டி, கமலாபுரம், மந்திகுளம், ஜமீன் செங்கல்படை
12-07.08.2024: புதூர்-சேவை மையம், மாவில்பட்டி-அயன் கரிசல் குளம், மாவில்பட்டி, சென்னமாரெட்டியாபட்டி, மணியக்காரன்பட்டி, வெம்பூர், முத்துசாமிபுரம், சிவலார்பட்டி, மெட்டில்பட்டி
13-08.08.2024: கயத்தார்-சமுதாய நலக்கூடம், வானரமுட்டி-வானரமுட்டி, கே. குமாரரெட்டியாபுரம், காலங்கரை பட்டி, காளம்பட்டி
14: 08.08.2024: ஓட்டப்பிடாரம்-சமுதாய நலக்கூடம், கக்கரம்பட்டி-வள்ளிநாயகபுரம், சந்திரகிரி, குறுக்குசாலை, கே. சண்முகாபுரம், வாலசமுத்திரம்
15-08.08.2024: புதூர்-சமுதாய நலக்கூடம், மாசார்பட்டி-முத்துலாபுரம், கருப்பூர், வேடப்பட்டி, இனாம் அருணாச்சலபுரம், அயன்ராசாப்பட்டி, மேலநம்பிபுரம், கீழ்நாட்டுக்குறிச்சி, வீரபட்டி, மாசார்பட்டி
16-09.08.2024: ஓட்டப்பிடாரம்-சமுதாய நலக்கூடம், குலசேகரநல்லூர்-குலசேகரநல்லூர், ஆரைகுளம், எஸ். கைலாசபுரம், கீழமங்கலம்
17-09.08.2024: புதூர்-சமுதாய நலக்கூடம், தாப்பாத்தி-மேலக்கரந்தை, தாப்பாத்தி, பட்டிதேவன்பட்டி, அயன்வடமலாபுரம், சின்னவநாயக்கன்பட்டி, வெளவால் தொத்தி, செங்கோட்டை, கீழகரந்தை, சங்கரலிங்கபுரம்
18-09.08.2024: விளாத்திகுளம்-அரசு உயர்நிலைப்பள்ளி, சிவஞானபுரம்-சிவஞானபுரம், வெள்ளையம்மாள்புரம், நமசிவாயபுரம், கே. குமாரரெட்டியாபுரம், இனாம் சுப்ரமணியாபுரம், அருங்குளம், கழுகாசலபுரம், வள்ளிநாயகிபுரம், மார்த்தாண்டம்பட்டி, அயன்செங்கல்படை, சக்கம்மாள்புரம்
19-12.08.2024: கயத்தார்-கே. சிதம்பரபுரம் சாஸ்தா கோவில் மஹால்-சிதம்பராபுரம், குப்பணாபுரம், தெற்கு வண்டானம், வடக்கு வண்டானம், குருமலை
20-12.08.2024: ஓட்டப்பிடாரம்-நாடார் திருமண மண்டபம், பசுவந்தனை-பசுவந்தனை, நாகம்பட்டி, கீழமுடிமண், மீனாட்சிபுரம், பி. துரைசாமிபுரம்
21-12.08.2024: விளாத்திகுளம்-சேவை மையம், அயன் பொம்மையாபுரம்-குருவார்பட்டி, ஆற்றங்கரை, ஜமீன் கரிசல்குளம், அயன் பொம்மையாபுரம், ஜமீன் கோடாங்கிபட்டி, கே. சுந்தரேஸ்வரபுரம், வில்வமரத்துபட்டி, பி. மீனாட்சிபுரம், பேரிலோவன்பட்டி, கீழவிளாத்திகுளம்
22-13.08.2024: சாத்தான்குளம்- TNTDTA ரஞ்சி ஆருண் உயர்நிலைப்பள்ளி, ஆனந்தபுரம்-செட்டிகுளம், பிடானேரி, பழங்குளம், எழுவரைமுக்கி, பன்னம்பாறை
23-13.08.2024: கோவில்பட்டி-சமுதாய நலக்கூடம், ஊத்துப்பட்டி-ஊத்துப்பட்டி, கிழவிப்பட்டி, திட்டங்குளம், தீத்தாம்பட்டி
4: 13.08.2024: புதூர்-சமுதாய நலக்கூடம், ராமச்சந்திராபுரம்-ராமச்சந்திராபுரம், வாதலக்கரை, முத்தையாபுரம், லெட்சுமிபுரம், மிட்டா வடமலாபுரம், கே. துரைசாமிபுரம், கவுண்டன்பட்டி, நாகலாபுரம்
25-13.08.2024: ஓட்டப்பிடாரம்-சமுதாய நலக்கூடம், சில்லான்குளம்-முறம்பன், சங்கம்பட்டி, சில்லான்குளம், பரிவல்லிக்கோட்டை, குதிரைகுளம்
26-13.08.2024: விளாத்திகுளம்-சமுதாய நலக்கூடம், சூரங்குடி-வேம்பார் தெற்கு, வேம்பார், சூரங்குடி, பெரியசாமிபுரம், கே. தங்கம்மாள்புரம், மேல்மாந்தை, தத்தனேரி, நெடுங்குளம், அரியநாயகிபுரம், எம். குமாரசக்கணாபுரம், எம். சண்முகாபுரம்
27-14.08.2024: ஓட்டப்பிடாரம்-செயின்ட் மைக்கேல் சமுதாய நலக்கூடம், தருவைகுளம்-மேல அரசடி, கீழ அரசடி, தருவைகுளம், பட்டிணமருதூர், வேப்பலோடை, வேடநத்தம், தெற்கு கல்மேடு,
28-16.08.2024: புதூர்-சமுதாய நலக்கூடம், மேலக்கல்லூரணி-பூதலாபுரம், மாதலாபுரம், சென்னம்பட்டி, என். ஜெகவீரபுரம், கீழ அருணாசலபுரம், கந்தசாமிபுரம், மேல அருணாசலபுரம், மாவிலோடை, மேலக்கல்லூரணி, காடல்குடி
,
இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை,
குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 44 வகையான சேவைகளை பெறுவதற்கான கோரிக்கை மனுக்களை மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம்.
எனவே தூத்துக்குடி மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி நேரடியாக கோரிக்கைகளைப் பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் நடத்தப்படும் “மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்களில் பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


