தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிப்பிக்கூடத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு. கோ. லட்சுமிபதி இ ஆ ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பிற்கான கருத்துக்களை கூறினார்.
இதில் பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


