பொன்வண்ணன் ( மே 06, 1964) முழு பெயர் பொன்வண்ணன் தேவர். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தார். பல தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் சக நடிகையான சரண்யாவைத் திருமணம் செய்துக்கொண்டார். பலராலும் பாராட்டப்பட்டு விருது பெற்ற ஜமீலா என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.


