தூத்துக்குடி பிரையண்ட் நகரில் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,தூத்துக்குடி மாநகர் மாவட்டம் பிரையண்ட் நகர் பகுதி கழகம் சார்பில், பகுதி கழகச் செயலாளர் மாரிமுத்து ஏற்பாட்டில் மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழக அவைத் தலைவர் தங்க மாரியப்பன், மாவட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருமலை தங்கம், சுற்றுசூழல் மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் தாமஸ் ஜோவர், பகுதி செயலாளர்கள் அண்ணா நகர் சின்னச்சாமி, திரேஸ்புரம் ஜான் பெர்ணாண்டோ, முத்தையாபுரம் மதன் குமார், 33வது வட்ட செயலாளர் மைக்கேல் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


