ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் செய்துங்கநல்லூர் மெயின் ரோட்டில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இதுதான் உங்களுக்கு கடைசி தேர்தலாக இருக்கும், எனவே இந்த சர்வாதிகாரியாகிய பிஜேபி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இதுவே உங்களுக்கு சரியான வாய்ப்பு அதனை பயன்படுத்துங்கள். 100% வாக்களியுங்கள், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின்பு கேஸ் சிலிண்டர் 500, பெட்ரோல் 75 , டீசல் 65 ரூபாயாக குறைக்கப்படும் என்றார். அப்பொழுது பொதுமக்கள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர் அதில், செய்துங்கநல்லூரில் பாலக்காடு பழனி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று கேட்டார்கள், அதற்கு அவர் இது குறித்து நான் பலமுறை கடிதம் எழுதி பாராளுமன்றத்தில் பேசினேன் ஆனால் பிஜேபி ஆட்சி இருக்கும் வரை இது நடைபெறாது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் முதல் வேலையாக பழனி பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் செய்துங்கநல்லூரில் அரசு பள்ளிக்கூடங்கள் இல்லாமல் இருக்கிறது தற்பொழுது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல்வராக வந்த பின்பு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறார். அதனை செய்து நல்லூர் மக்களுக்கு கிடைக்க அரசு பள்ளிக்கூடங்கள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிக்கூடங்கள் செய்துங்கநல்லூருக்கு தேவை என்பது குறித்து தினகரன் செய்தி நாளிதழில் கடந்த வாரம் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது , மனுவுடன் சேர்த்து பேப்பர் கட்டிங் செய்யும் வைத்து பொதுமக்கள் கொடுத்தனர்.
இது குறித்து நான் ஆய்வு செய்து அரசு பள்ளிக்கூடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் செய்துங்கநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சமுதாய நலக்கூடம் சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் எனது தாய் வீடாக இந்த தூத்துக்குடி மாவட்ட மக்களை நினைக்கிறேன். எனவே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து மீண்டும் என்னை உங்களோடு சேவை செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கி பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி,கருங்குளம் வட்டார விவசாய சங்க தலைவர் குமார், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் தோனி அப்துல் காதர், ஒன்றிய சிறுபான்மை அமைப்பு செயலாளர் பஷீர் இம்ரான், ஒன்றிய தொழில்நுட்ப அமைப்பாளர் மதுபாலா மணி, கிளைச் செயலாளர்கள் முத்துச்சாமி, இசக்கி, கலாநிதி, பட்டி முருகன், வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன், வனிதா ஸ்டாலின்,காங்கிரஸ் ஸ்ரீவை சட்டமன்ற தொகுதி பொதுச்செயலாளர் சித்திரை பாண்டி, நயினார், ரவுப், ஷேக் முகமது,
அகில இந்திய பார்வர்டு பிளாக் பேசிய செயலாளர் ஸ்ரீவை
சுரேஷ்,
மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் , ஒன்றிய செயலாளர் ஒய்க்காட்டான், மாநில மாணவர் அணி அமைப்பாளர் கொம்பையா பாண்டியன், வர்த்தக அணி அமைப்பாளர் கொம்பையா பாண்டியன், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர் மணி ராஜ்குமார் ,மகாதேவன், அறிவழகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முசாமில் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


