இராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் உள்ள உயிர் வேதியியல் துறையில் பேராசிரியராகவும், இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பள்ளியின் டீனாகவும் பணியாற்றி வருபவர் டாக்டர் சண்டி மண்டல். இவர் புற்றுநோய்க்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக உயிர் நுட்ப துறையில் புற்று நோய் சம்பந்தமான உரை நிகழ்த்தினார். அதன் பின் இவர் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம், மற்றும் மருதூர் அணை போன்றவற்றை பார்வையிட்டார். ஆதிச்சநல்லூரின் தமிழர் நாகரிகம், மருதூர் அணையின் தமிழர்களின் கட்டிட கலை போன்றவற்றை கண்டு அவர் வியந்து போற்றினார். இவருடன் பேராசிரியர் டாக்டர் சுதாகர், தொல்லியல் துறை மாணவன் பால சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் வந்தனர். டாக்டர் சண்டி மண்டலை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முனைவர் பட்ட ஆய்வாளர் கா. அபிஷ்விக்னேஷ், உள்பட பலர் வரவேற்றனர். ராஜஸ்தான் பல்கலைகழக பேராசிரியர் தமிழரின் நாகரீகத்தினை அறிய சுற்றுப்பயணம் மேற்கொண்டது, தமிழரின் சிறப்பை அறிந்து கொண்டது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


