சாத்தான்குளம் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆர்எம்பி சிஎஸ்ஐ பிஎஸ்கே ராஜரத்தினம் நினைவு பிஎட் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. முன்னாள் எம்பி மற்றும் டயாசிசன் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயசீலன், கல்லூரி தாளாளர் மாமல்லன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜெபசெல்வி வரவேற்றார். சேகரகுரு பாஸ்கர் அல்பர்ட் ராஜன், உதவி குரு கஷ்பா ஆகியோர் ஜெபம் செய்தனர். மாணவ மாணவிகளின் விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாாங்கி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மேல்நிலை கல்வி நிலவர குழு செயலாளர் ஜெபசந்திரன், குருத்துவ செயலாளர் தேவராஜ் ஞானசிங், தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக செயலாளர் ஸ்ரீதர் ரொட்டிரிகோ, நிர்வாக குழு உறுப்பினர் குணசீலன் தங்கதுரை, சாத்தான்குளம் கல்வி கழக தலைவர் ஜோசப், அன்புதங்கபாண்டி, வக்கீல் கிருபாகரன்உட்பட பலர் கலந்து கொண்டனர். அட்லின் பிரின்சஸ் நன்றி கூறினார்.


