தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் முத்துநகர் மற்றும் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஏப்ரல் 2 முதல் 16 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பயணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தூத்துக்குடி சென்னை எழும்பூர் முத்து நகர் ரயில் (12694), தூத்துக்குடி மைசூர் ரயில் (16235) ஆகியவை ஏப்ரல் 2 முதல் 16 வரையும், மைசூர் – தூத்துக்குடி ரயில் (16236) ஏப்ரல் 2 முதல் 15 வரையும் மேலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



