நாசரேத் அருகில் உள்ள திருமறையூர் மறுரூப ஆலயத்தில் தமிழ் கருத்தரங்கம் நடை பெற்றது.
திருமறையூர் சேகரம் திருமறையூர் மறுரூப ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் சார்பாக தமிழ்க் கருத்தரங்கு நடைபெற்றது. அகப்பைகுளம் சேகர குரு வானவர் பாஸ்கர் இறை வேண்டலை ஏறெடுத்தார். கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தவர்களை திரும றையூர் சேகர குருவானவர் ஜான் சாமுவேல் வரவேற்றார்.கனோன் ஆர்தர் மர்கா ஷியஸ் சபைமன்ற தலைவ ரும் வாழையடி சேகர குரு வானவருமாகிய வெல்டன் ஜோசப் தலைமை வகித்து மிஷனரிகள் தமிழகத்தில் செய்த தொண்டு குறித்து தலைமை உரைஆற்றினார்.
சாயர்புரம் போப் கல்லூரி தமிழ்த் துறை ஓய்வுபெற்ற தலைவர் பேராசிரியர் வெலிங்டன் பிரான்சிஸ் பிரபாகர் பேராயர் ராபர்ட் கால்டுவெல் மற்றும் டாக்டர் ஜி.யூ.போப் ஆகியோரின் தமிழ் தொண்டும் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பும் ஓர் வரலாற்று பார்வை என்ற தலைப்பில் சிறப்புறை ஆற்றினார். திரு மண்டல பெருமன்ற உறுப்பினர் தேவதாஸ் கருத்த ரங்கை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது எப்படி என்பதை குறித்து விவாதித் தார்.கிறிஸ்தவ வரலாற்றுச் சங்க நிறுவனர் மன்னா செல்வகுமார் வரலாற்றின் முக்கியத்துவத்தை குறித்து பேசினார்.
திருமறையூர் சே கர பொருளாளர் அகஸ்டின் செல்வராஜ் நன்றி கூறினார். குருவானவர் அகஸ்டஸ் பால்பாண்டியன் இறுதி ஜெ பம் ஏறெடுத்தார். ஞானசிங் எட்வின் ஆசீர்வாதம் வழங் கினார். இந்நிகழ்வினை மறுரூபஆலயவாலிபபெண் கள் ஈவ்லின், பிரின்சி, ஜெஸ்லின் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு மர்காஷியஸ் சபை மன்றத்திலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சபை ஊழியர் ஸ்டான்லி, பாடகர் குழு தலைவர் ஜோயல் கோல்டுவின், பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி கோல்டா குருவா னவர்கள் ஜெபஸ், பேராய ரின் உதவியாளர் பாஸ்க ரன்,மூக்குப்பீறி சேகர தலை வர்ஞானசிங் எட்வின்,உடை யார்குளம் சேகர தலைவர் அகஸ்டஸ் பால்பாண்டியன், நளராஜபுரம் சேகர குருவா னவர் பில்லி ஜெயராஜ், கடையனோடை சேகர குருவானவர் ஆசீர், ஓய்வு பெற்ற குருவானவர்கள் தேவராஜ் ஞானசிங், பொன் னுசாமி, செல்வராஜ் ஆகி யோர் பங்கு பெற்றனர்.
இதற்கான ஏற்பாட்டினை திரும றையூர் மறுரூப ஆலய திரு ண்டல பெருமன்ற உறுப்பி னர்கள் ஜெயபால்,தேவதா ஸ்,சேகரசெயலர் ஜான்சே கர், பொருளாளர் அகஸ்டின் ஆண்கள் ஐக்கியசங்க செய லாளர் ஆபிரகாம்,பொருளா ளர்ஆசீர்துரைராஜ்ஆகியோ ருடன் இணைந்து சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.


