விளாத்திகுளம் பகுதிகளில் ரூ.1.33கோடி மதிப்பிலான சாலைப் பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், A.லட்சுமிபுரம் – சிவஞானபுரம் SDRF24-25 திட்டத்தின் கீழ் 63.93-லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணிகளையும், அயன்செங்கல்படை கிராமத்தில் கீழ் ரூ.34.40-லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணிகளையும், K.குமாரபுரம் கிராமத்தில் ரூ.34.67-லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணிகளையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி, அயன்செங்கல்படை ஊராட்சி மன்ற தலைவர் தங்கம்மாள், மாவட்ட பிரதிநிதி ஆதிசங்கர், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் காளிராஜ்பாண்டியன், வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


