திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக இருப்பது வற்றாத ஜீவ நதியான நமது தாமிரபரணியாகும். இந்த நதியினை சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க அரசு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்துள்ளதை தொடர்ந்து நம் தாமிரபரணி அமைப்பின் சார்பில் தாமிரபரணி நதியினை பாதுகாக்க பணியாற்றி வரும் தன்னார்வு அமைப்புக்கள், தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம் மகராஜநகர் ஜெயேந்திரர் மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் வைத்து நம் தாமிரபரணி பவுண்ட் டிரஸ்டி மற்றும் நெல்லை உழவாரப்பணி குழாம் தலைவர் முத்துக் கிருஷ்ணன் தலைமையிலும் , ATree நிறுவன தலைவர் மதிவாணன், முத்தமிழ் பள்ளி தாளாளரும் நம் தாமிரபணி உறுப்பினருமான அமரவேல்பாபு இவர்களது
முன்னிலையில் நடைபெற்றது. நம் தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர் சாமி. நல்லபெருமாள் வரவேற்புரை நிகழ்த்தினார், நம் தாமிரபரணி டாக்டர் விதுபாலா, அகில பாரத துறைவிகள் சங்க நதிகள் பாதுகாப்பு பிரிவு தலைவி ஞானேஸ்வரி, எழுத்தாளர் சென்னை பூமா பிள்ளை, முத்தாலங்குறிச்சி காமராஜ், புத்தனேரி செல்லப்பா, எக் பவுண்டேஷன் நிவேக் மற்றும் குழுவினர் ,வி.எம் சமுத்திரம் மேம்பாட்டு டிரஸ்ட் பொறுப்பாளர் சுரேஷ் மற்றும் செந்தில், நீட் பவுண்டேஷன் அகிலாண்டம், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரநாராயணன் நம் தாமிரபரணி ரவி வெங்கடேஷ், லூர்து ராஜ், சிகாமணி, வழக்கறிஞர் கல்யாண ராமன், சிவகுமார், கிரிக்கெட் மூர்த்தி,கூடலரசன், குணசீலன் இந்து மக்கள் கட்சி உடையார், சட்ட பஞ்சாயத்து இயக்கம், கருங்குளம் நலச் சங்கம், தூத்துக்குடி விவசாய சங்கம், எவர் கிரின் குளோபல், Aims india foundation, அனுமன் நதி குழுவினர் உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்
1- தாமிரபரணி ஆற்றின் இரு கரை பகுதியை 1947 ல் உள்ள ஆவணம் படி டிஜிட்டல் சர்வே செய்து, (மக்கள் பார்வையிட கூகுள் மேப்ஸ் பதிவேற்றம் செய்ய வேண்டும்) சர்வே கல் நடவேண்டும்
2- ஆற்றங்கரை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்
3- ஆற்றின் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் ஆற்றின் உள்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கழிவறைகள், பாதாள சாக்கடை மேனுவல்களை அப்புறபடுத்திவிட்டு நவீன கால அறிவியல் தொழிட்நுட்பத்தை பயன்படுத்தி சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
4-ஆற்றின் கரையில் அமைந்துள்ள வீடுகள், நிறுவனங்கள், மருத்துவமனை மூலம் நேரடியாக கழிவுகள் ஆற்றில் விடுவதை தடுத்தல், ஆற்றின் இரு கரைகளிலும் கழிவுநீர் ஆற்றிற்குள் வருவதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை தொழிற்சாலை, பண்ணை விவசாயம், கட்டிட வேலைகளுக்கு பயன் படுத்த நடவடிக்கை எடுத்தல்,
5-பரிகாரம் என்ற பெயரில் சிலர் துணிகளை ஆற்றில் வீசுவதால் தண்ணீர் மாசுபடுவதுடன் ஆற்றுப்படுகையில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க பரிகார பணிக்கு ஆங்காங்கே தனி இடம் ஒதுக்கி தாமிரபரணி நதியினை பாதுகாத்தல்,
6-ஆற்றில் வாகனங்கள் கழுவுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைத்தல்,-
7- ஆற்றில் அமைந்துள்ள படித்துறை, புராதாண கல் மண்டபங்களை சீரமைப்பு செய்து பராமரிப்பு செய்தல்,
8- ஆற்றங்கரையில் அயல்நாட்டு மரங்கள், சீமை கருவேல மரங்களை அகற்றி நாட்டுரக மரங்களையும், மூலிகை செடிகளை நடுதல் வேண்டும்
9- தாமிரபரணி ஆற்றில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பயன்படும் 22 கால்வாய்களில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, சீரமைப்பு செய்தல் வேண்டும்
10- அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கழிவுகளை பாதாள சாக்கடையில் கலப்பதை தடுத்தல் வேண்டும்
11- ஆற்றில் ஈம காரியம் செய்யும் போது சுட்ட பானை பயன்பாடுகள் தடைச் செய்து சுடாத மண் பானை படுத்தல், சோப்பு, ஷாம்பு, பயன் பாட்டை தடை செய்தல், முக்கிய அம்மாவசை காலங்களில் தர்ப்பணம் செய்ய கொண்டு வரப்படும் பொருட்கள் பிளாஸ்டிக் கவரில் இருப்பதை தடை செய்தல், ஆற்றில் மலம் கழிக்க தடை விதித்தல், ஆற்று பகுதியில் மது அருந்துதலை தடை செய்தல்
12) ஆற்றை தூய்மையாக பராமரிப்பு செய்ய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிட்டல் பலகை மூலம் விளம்பரம் செய்தல், குறும் படம், பத்திரிகை, சினிமா,செய்தி சேனல் வழியாக விளம்பரங்கள் செய்தல், பள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகளிடம் காலையில் பள்ளி கல்லூரி ஆரம்பிக்கும் போது விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து அவர்கள் மூலம் அவர்களது குடும்பம் மற்றும் உறவு, மற்றும் நட்பு வட்டாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
உள்ளிட்ட பணிகளை திட்ட அறிக்கை தயாரிப்பில் சேர்த்து தாமிரபரணி நதியினை பாதுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .
நம் தாமிரபரணி டிரஸ்டி வித்யா சாகர் நன்றி கூறினார்.


