சேர்ந்தமரம் சுமார்1000ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊராகும்…!
எப்படி என்கிறீர்களா…?
இதற்கு ஆகப் பெரிய சாட்சியாக விளங்குவது…
பிரகலாதீஸ்வரர் கோவில்தான்…!
1000 ஆண்டுகள் பழமையான இக்கோவில்தான்
இவ்வூரின் பழமையின் அடையாளம்… பெருமை… எல்லாம்…!
சேர்ந்தமரம் வட்டாரத்திலுள்ள…
ஆகிய ஊர்கள் கருப்பாநதி தண்ணீரால் மிகுந்த செழிப்புடன் விவசாயம் நடைபெற்ற ஊர்கள் ஆகும்.
(1971 ல் அணை கட்டும் முன்புவரை கருப்பாநதி யின் இயற்கையான ஆற்று வழித்தடம் கிழக்கு நோக்கிய திசையில் இதுதான் என்பது முன்னோர்களின் செவிவழிச் செய்தி ஆகும் )
சேர்ந்தமரம் 1000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்த ஊர் என்பதற்கு இங்கு அமைந்துள்ள பிரகலாதீஸ்வரர்_லோகநாயகி திருக்கோவிலே ஆகப்பெரும் சான்றாகும்.
இக்கோவில் கட்டப்பட்ட காலத்திலேயே முதன்முதலாக இவ்வூரில் சுண்ணாம்பு உலைகள் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.
சொக்கம்பட்டி ஜமீன் ஆளுகைக்குட்பட்ட இவ்வூர்களில்17ஆம் நூற்றாண்டின் இறுதியில் அபரிதமான விவசாய வருமானம் அடைந்த பெரிய விவசாயக்குடும்பத்தினர்
ஊருக்கு ஓரிருவர் காரைவீடு கட்டத் தொடங்கினர்…!
அக்காலத்தில் ஜமீனில் பல கட்டுப்பாடுகள் உண்டு மண்வீடு கட்டத் தடை இல்லை…!
காரைவீடு கட்ட ஆசைப்பட்டால் பல சட்டவிதிகளை(?)க் காரணம் காட்டியும் புதிது புதிதாகப் பல விதிகளை உருவாக்கித் தடுத்து விடுவார் #ஜமீன்தார்
(அவர்களைத் தவிர வேறு யாரும் காரைவீடு கட்டிவிடக் கூடாதாம்!)
ஆனால் கி.பி. 1700 களின் பிற்பகுதியில்…. பிரிட்டிஷ் ஆட்சி கோலோச்சத் தொடங்கியபோது…
சொக்கம்பட்டி ஜமீன் மெல்ல வலுவிழக்கத் தொடங்கியது…!
சேர்ந்தமரம் வட்டாரத்திலுள்ள ….
திருமலாபுரம்மலை , அருளாகுளம் உட்பட இரு குளங்கள்
சேர்ந்தமரம் பாட்டக்குளம், நெடுங்குளம்
குலசேகரமங்கலம்
சூட்டிக்குளம்
பெருங்குளம்
தன்னூற்று_குமாரநேரி குளம்
ஆகிய ஏழுகுளங்களும்….
சொக்கம்பட்டிஜமீன் வசமிருந்து RCகிறிஸ்தவசபை வாங்கிவிட்டது…
இதன்பின்னர் சேர்ந்தமரத்தில்
ராயப்பர்_சின்னப்பர் தேவாலயம் கட்டப்பட்டது…. தொடர்ந்து சேர்ந்தமரத்தில் பெரும் புள்ளிகள் #காரைவீடு கட்டத் தொடங்கினர்.
அந்தக் காலகட்டத்தில்தான்
சுண்ணாம்பு_ காளவாசல் கள்
சேர்ந்தமரம் ஊரில் சிறந்து விளங்கியிருக்கின்றன.
பிரகலாதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் தாண்டி விட்டதால் அக்கோவிலுக்கும் சுண்ணாம்பு அரைத்துக் கொடுத்த சேர்ந்தமரத்தில் இன்றும் வாழும் சோழியவெள்ளாளர் இனத்தவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்து வருவது புலப்படுகிறது.
முதன்முதலில் இரண்டு குடும்பத்தினர் இங்கு குடியேறி
சுண்ணாம்பு #காளவாசல்களை அமைத்து இரவு,பகலாக ஓய்வின்றி அணையா அடுப்பு ஏற்றி #சுண்ணாம்புக்கல் வேகவைத்து
தொழில் செய்துள்ளனர்.
எல்லா வகைச் சுண்ணாம்பும் கட்டிடத்திற்கு ஆகும் என்று கூறமுடியாது..!
ஆனால் இவ்வட்டாரத்தில்…..
வீரசிகாமணி
ஆண்டார்குளம்
…………ஆகிய ஊர்களில் கட்டுமானத்திற்கு ஏற்ற தரமான சுண்ணாம்புக் கற்கள் நிறைய உண்டு…
இந்தக் காளவாசல்கள் சேர்ந்தமரம் வட்டாரத்தில் பல காரைவீடுகளின் கட்டுமானத்தில் பெரும் பங்காற்றியுள்ளன.
இங்கிருந்து நெல்லை மாவட்டத்தின் பல ஊர்களுக்கும் சுண்ணாம்புக்கல் கொண்டு செல்லப்பட்டிருக்கக் கூடும்
(எமது முப்பாட்டனார்
அருணாசல நாடார்1880ஆம் ஆண்டு தன்னூற்றின் முதல்காரைவீடு கட்டியவர் என்பது கிளைக்கதை..!
ஜமீன் அனுமதி வழங்காததால் #கலெக்டர் ஆக இருந்த R.C பிஷப் வரை சென்று மனு அளித்து போராடி ….
கலெக்டர் ஜமீனுக்கு அழுத்தம் கொடுத்து, 100 ஏக்கர் நிலத்திற்கு வரி செலுத்தும் அவருக்கு வீடு கட்டக்கூட தடை விதிப்பது நியாயமில்லை
என கடிதம் எழுதி, அதற்குப் பிறகு வேண்டா வெறுப்பாக சிலபல நிபந்தனைகளுடன் தாறுமாறாக வரி விதித்து, அனுமதி அளித்தனராம்.
கட்டத் தொடங்கி பல தடைகளைத் தாண்டி வீட்டைக் கட்டி முடிக்க சுமார் 6 ஆண்டுகள் ஆனதாம்.
இப்படி போராடி ஊருக்கு ஓரிருவர் கட்டியதால்தான் அவை #காரைவீடு என காலங்காலமாக அழைக்கப் படுகின்றன.
ஒரு பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தின் எழுச்சியின் அடையாளமாக அந்த வீடுகள் விளங்கின என்றால் மிகையில்லை…!
இந்தப் போராட்டம் நமக்குத் தேவையா? என எண்ணிய பல பெருந்தலைகள் #காரைவீடு கட்டும் கனவையே கைவிட்டனராம்…!)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த….
இந்தக் #காளவாசல்கள் இப்போது சில ஆண்டுகளாக தம் மூச்சை நிறுத்தி விட்டன!
தற்காலத்தில் #சிமிண்ட் பயன்பாடு அதிகரித்து வருவதால் எப்போதாவது அற்ப சொற்பமாகவே இவை இயங்குகின்றன!
ஆனால்…. சுண்ணாம்பு சாந்து அரைத்து கட்டப்படும் வீடுகள் வெயில்காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் கதகதப்பையும் தருபவை…!
சுமார் 25 ஆண்டுகட்கு முன்னர் #சுண்ணாம்பு வேண்டுமெனில் இந்தச் சோழியர் பெருமக்களிடம்…. 1மாதம் முன்னரே முன்பணம் கொடுத்து காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது…!
ஆனால் இன்றோ…. இவை பரிதாபமாக ஒரு நெடிய வரலாற்றின் நீர்த்துப்போன சாட்சியாக நிற்கின்றன!
சேர்ந்தமரம் வீரசிகாமணி சாலையின் கிழக்கே கருப்பாநதியின் பத்துகண்பாலத்தின் தென்புறம் அமைந்துள்ள இவற்றைப் பலரும் பார்த்திருக்கலாம்…. ஆனால் அலட்சியமாக கடந்து சென்றிருப்பீர்கள்!
இனிமேல் அப்படிப் போக முடியாது.


