உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு, கனிமொழி எம்பி., துர்க்கா ஸ்டாலின் ஆகியோரை அமைச்சர் கீதாஜீவன் சந்தித்து பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.
உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு, சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை சந்தித்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து பெற்றார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் பூங்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்கள் பெற்றார்.


