தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பிரகதீஸ்வரர் கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சாமிக்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து மகா சிவராத்திரி முன்னிட்டு இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


