களரி என்பது தென்தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு. இந்த விளையாட்டில் சிரம்மம், சிலம்பம், வர்மம், சுவடு உள்பட பல் வேறு விளையாட்டுக்கள் உள்ளன. இந்தியாவில் தமிழர்கள் மூலம் தோன்றிய இந்த விளையாட்டு சீனா உள்பட பல நாடுகளுக்கு சென்று காரத்தே, குங்பூ என உருமாற்றமாகி மீண்டும் தமிழகத்துக்குள் நுழைந்தது. இதற்கிடையில் களரி ஆங்கிலேயர் காலத்தில் தடை செய்யப்பட்டது. ஆனாலும் தமிழ்களின் வீர விளையாட்டான இதை காப்பாற்றி களரி வீரர்கள் வளர்த்து வந்தனர். ஆனாலும் நலிவடைந்த நிலையில் தான் களரி இருந்து வந்தது. தற்போது பல்வேறு அமைப்புகள் களரி விளையாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கும் உலக களரி கூட்டமைப்பு சார்பில் சுமார் 25 நாடுகளில் களரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. கூட்டமைப்பில் நிறுவனராக முனைவர் ரமேஷ் ரத்தினகுமாரும், இணை நிறுவனராக பாரத், லதா ஆகியோரும் செயல்பட்டு வருகிறார். முதன்மை அலுவலராக முனைவர் செந்தில் ராஜ் குமார் பணியாற்றிவருகிறார். இங்கிலாந்தில் களரி அடிமுறை விளையாட்டு போட்டியை உலக களரி அடிமுறை நிறுவனர் முனைவர் ரமேஷ் ரத்தின குமார் நடத்தி, நம் மண்ணில் களரியை விளையாடக்கூடாது என தடைசெய்தவர்கள் ஊரியேயே களரியை நடத்தி வெற்றிக்கண்டுள்ளார். இதனால் உலக களரி கூட்டமைப்பினரை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.
இந்த கூட்டமைப்பில் ஒரு பகுதியாக இந்திய களரி கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக வனிதாவும், செயலாளராக அனுராதாவும், பொருளாளராக சந்திரா ரத்தினகுமாரும் செயல்பட்டு வருகிறார். களரி போட்டியின் தொழில்நுட்ப இயக்குனர் சுரேஷ் மணி ஆசானும், போட்டி இயக்குனராக சுரேந்தர் ஆசானும் செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் கடந்த மாதம் பிப்பிரவரி 25 ந்தேதி கோவையில் தேசிய அளவிலான களரி விளையாட்டு போட்டி நடைபெற்றது. கோயம்புத்தூர் காலப்பட்டியில் உள்ள சுகுணா பிப் ஸ்கூலில் இதற்கான விளையாட்டு நடந்தது.
காலை 7 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தில் இருந்து 400 மாணவ மாணவிகள் போட்டியிட்டனர். களரி மற்றும் சிலம்ப விளையாட்டு நடைபெற்றது.
இதில் வயதை அடிப்படையாக கொண்டு 6 நிலைகளில் போட்டி நடை பெற்றது. இதில் 6 வயதில் துவங்கி 40 வயது வரை உள்ளவர்களுக்கு போட்டி நடந்தது.
இதில் வெற்றிபெற்றவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசை குப்புசாமி உணவகத்தின் நிர்வாக இயக்குனர் அருண் குமார் கணேசன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கிருஷ்ண மூர்த்தி , சபரி மற்றும் , ராபர்ட் ஆண்டனி ராஜ் ஆகியோர் வழங்கினர். பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்புஅழைப்பாளராக உலக களரி அடிமுறை கூட்டமைப்பு முதன்மை அலுவலர் முனவைர் செந்தில் ராஜ் கலந்து கொண்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மூத்த ஆசான்கள் கிறிஸ்து தாஸ் ஆசான், சிவலிங்க ஆசான் உள்பட கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடை இந்திய களரி கூட்டமைப்பினர் செய்திருந்தனர். வருகிற 23 ந்தேதி உலக களரி கூட்டமைப்பு சார்பில் ஆஸ்திரிலேயாவில் தேசிய அளவிலான களரி விளையாட்டு நடைபெறவுள்ளது.


