தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி சார்பில் “கடற்சார் உயிரின வளர்ப்பு முறைகள்” குறித்த ஒரு மாத கால திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ் நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, தருவைக்குளத்தில் 05.02.2024 முதல் 05.03.2024 வரை “கடற்சார் உயிரின வளர்ப்பு முறைகள்” குறித்த ஒரு மாத கால திறன் மேம்பாட்டு பயிற்சி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் 43 மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் கடற்பாசி வளர்ப்பு, சிங்கி இறால் வளர்ப்பு, வனாமி இறால் வளர்ப்பு, கடல் அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும் திறந்த வெளி கடலில் கூண்டுகள் அமைத்து கடல் மீன்கள் வளர்த்தல் போன்ற பாடங்களும் செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் உதவிப்பேராசிரியர் கோ. அருள்ஒளி, பயிற்சியாளர்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, உதவிப்பேராசிரியர்கள், டி.சக்திகா மற்றும் வி.சொர்ணலட்சுமி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.
முதல்வர் அகிலன், தலைமையுரை ஆற்றினார். அவர்தம் உரையில் பயிற்சியாளர்களை கடற்சார் உயிரின வளர்ப்பில் சுயதொழில் துவங்கி பயனடைய வேண்டும் என்று அறிவுறித்தினார். ஒரு மாத கால திறன் மேம்பாட்டு பயிற்சியினை க.சே.விஜய் அமிர்தராஜ், உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர்(பொறுப்பு), கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி, தருவைக்குளம் ஒருங்கிணைந்து நடத்தினார்.


