செய்துங்கநல்லூர் அருகே உள்ள மேல சிரியந்தூர் சிவகாமி அம்மாள் சமேத புறவரி ஈஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது.
நடு மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி, தேன்சிட்டு மாட்டு வண்டி என மூன்று பிரிவுகளாக நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் நடு மாட்டு வண்டியில் 17 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளில் 48 மாட்டு வண்டிகளும், தேன்சிட்டு மாட்டு வண்டிகளில் 38 மாட்டு வண்டிகளும் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.
முதலில் நடந்த நடு மாட்டுவண்டி பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. அதில் ஒரு மாட்டு வண்டி மட்டும் சாரதி கீழே விழுந்ததும் எங்கு செல்வது என்று தெரியாமல் போட்டியை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் போட்டியை காண வந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். அதன் பின்னர் அந்த மாட்டு வண்டி குளத்தின் கரையில் ஏறி சாய்ந்தது. அதே போல் மற்றொரு மாட்டு வண்டி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து நடந்த பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு மாட்டு வண்டிகள் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியை காண செய்துங்கநல்லூர், கருங்குளம், சேரகுளம் பகுதி சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.