ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் மாசித் திருவிழா தெப்ப உற்சவம் நடைபெற்றது.
நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் ஆழ்வாா் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் கடந்த பிப்.20இல் நடைபெற்றது. 9ஆம் திருநாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. நேற்று தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீா்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு சுவாமி பொலிந்து நின்ற பிரான் தாயாா்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.


