தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதேபோல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (28.02.2024) தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு வருகைதந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவியை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி புத்தகம் வழங்கி வரவேற்றார்.


