குமரிமுத்து (20 திசம்பர் 1940 – 28 பிப்ரவரி 2016) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர். பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார்.இவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் காட்டுப்புதூரில் தமிழ் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர்.
நடிகர் குமரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக 2016 பிப்ரவரி 29 அன்று தனது 75ஆவது வயதில் சென்னையில் காலமானார்.


