விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்திராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ என்.கே.பெருமாள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விளாத்திகுளம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு அதிமுக கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜெ. பேரவை செயலாளர் என்.கே.வரதராஜ பெருமாள், அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், அதிமுக இலக்கிய அணி பேச்சாளர் இளங்கோ, வார்டு கவுன்சிலர் பிரியா, மகளிர் அணி சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


