சாயர்புரம் அருகில் உள்ள திருப்பணிச்செட்டிகுளம் ஊராட்சி மன்ற புதிய கட்டிட திறப்பு விழா திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா முன்னிலை வகித்த இவ்விழாவில் தமிழ்நாடு அரசு மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்து விழா பேருரை ஆற்றினார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி உமரி சங்கர் குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜெபத்துரை தங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பிரியாமேரி, வார்டு உறுப்பினர்கள் இந்திரா,பிரவினா, சொரிமுத்து, இராமமூர்த்தி, சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் ஜெபதங்கம், நட்டாத்தி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பண்டாரம் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத்தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தன்னலம் கருதாது தொடர்ந்து மக்களுக்கு செய்யும் மக்கள் சேவையை பாராட்டி “என்றும் மக்கள் நாயகன்” என்னும் சிறப்பு விருது வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் திருவைகுண்டம் வட்டார திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஊராட்சி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக திருப்பணிசெட்டி குளம் ஊராட்சி மன்றத்தலைவர் சுயம்புகனி நன்றி கூறினார்.


