நமது பாசப்பறவைகளின் மூத்த உறுப்பினர், வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர் திரு.முத்தாலங்குறிசி காமராசு அவர்களின் மகன், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர் கா.அபிஷ்விக்னேஷ் எழுதிய “சில்வண்டு” என்ற நாடகம் நெல்லை அகில இந்திய வானொலி எப்.எம். இல் நாளை மறுநாள் (22.02.2024) வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது. இந்த நாடகத்தினை நெல்லை அழகிய நம்பி அவர்கள் இயக்கியுள்ளார். தயாரிப்பு திருநெல்வேலி அகில இந்திய வானொலி. அனைவரும் கேட்டு மகிழுங்கள். கருத்தை தெரிவியுங்கள். 7339112739, 890367820


