நாடாளுமன்ற தேர்தல் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படலாம் என பல்வேறு தரப்பு பொதுமக்கள் அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் உள்ள சுவர்களில் எழுதப்பட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சியின் விளம்பரங்களை அரசின் சார்பில் அதனை மறைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சாத்தான்குளம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பாலங்கள், சிறு சிறு தடுப்பு சுவர்கள் ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீரென நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதன் பின்னர் இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால் தற்போதே இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


