பொதுவாக மண் உருவாகு
தலைக் காலநிலையே நிர்ணயிக்
கிறது. அதிக மழை, காற்று, வெப்
பமுள்ள பகுதிகளிலே மண் உரு
வாகிறது. அதோடு மண்ணில்
வாழும் உயிரினங்களும் மண்
உருவாகுதலில் முக்கிய பங்கு
ஆற்றுகிறது. தவிர மண் அந்தந்த நிலவியலின் தன்மைக்கேற்ப
வேறுபடுகிறது. அதில் புரளும் தாதுக்கள் முக்கிய பங்குவகிக்கி
றது. மண்ணில் பலவகைப்படுகி
றது. வண்டல்மண், கரிசல் மண்,
செம்மண்,செம்புரைமண், பாலை
நிலமண், காட்டுமண்,சதுப்புமண்
என்று 7 வகையாக பிரிகின்றன. தவிர காரமண்ணும், உப்புமண்
ணும் குறிப்பிடத்தக்க மண்வகை
யாகும். இப்படி மண்ணின் வகை
யும், வளமையும், பெருமையும்
வேளாண்மைக்கும், அனைத்து உயிர் இனங்களுக்கும், அதோடு
வேளாண்அல்லாத
தொழில்களுக்கும் இன்றியமை
யாததாகிறது.
இப்படி மண்னின் வகைக
ளும், பெருமைகளும் இருந்தா
லும், நதிகளில் பெருவெள்ள
நீரால் தேங்கிப் புரளும் மணல்
மிக மிக முக்கியமாக கருதப்படு
கிறது. அதிலும் குறிப்பாக தாமிர
பரணி நதியின் மணல் என்றால்
தங்கத்திற்கு இணையானது.
தாமிரபரணி நதி மட்டுமே தமிழின் ஐவகை நிலங்களான
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்
தல், பாலை என இவ்வகை நிலங்
கள் வழியே பாய்ந்து செல்கிறது.
அதோடு இவ்வகை பஞ்ச நிலங்
களின் மணலை தன்னகத்தே
தாமிரபரணி கொண்டுள்ளது
என்பது பெருமையிலும் பெருமையே.
பொதுவாக நதிகளின் உட்
புறத்தில் (River bed area)3 அடியிலி
ருந்து 6 அடிஉயரம்வரைமணலை
தன்னகத்தே சேமிக்க 100லிருந்து
150 ஆண்டுகள் ஆகும் என நிலவியல் நிபுணர்கள் குறிப்பிடு
கின்றனர். இப்படி காலங் கால
மாக தாமிரபரணி நதி சேமித்து
வைத்திருந்த லட்சக்கணக்கான
டன் மணலை (பாபநாசம் முதல்
புன்னக்காயல் வரை) கடந்த 25
ஆண்டுகளில் பல விதங்களில்
அவை சூறையாடபட்டுவிட்டது.
அதன் விளைவு, ஆற்றில் எங்கு
பார்த்தாலும் சேரும் சகதியுமாய்
கண்ட கண்ட இடங்களில் ஆழமு
மாய் இருக்கிறது. இதனால்
ஆற்றில் கணக்கிலடங்க உயிர்
பலிகள். அதோடு மணலை நம்பி
வாழ்கின்ற நீர்வாழ் உயிரினங்
களும், தாவரங்களும் இல்லாது
தொலைந்து போய்விட்டன. தாமி
பரணியில் மணல் இல்லாததால் வேற்று மீன்களான கேட்பிஸ்,
சகதித்தேளி etc இவைகள் நம்
நதிக்கே சொந்தமான மீன் இனங்
களை அழித்து விட்டன. அதோடு
தாமிரபரணியில் மணல் இல்லா
மல் போய் சகதியும் சேரும் ஆன
தால் வேற்று நீர் தாவரங்களான
வேலிகாத்தான், அமலை, ஆகாய
தாமரை போன்ற இனங்கள் நதி
யில் அதிகமாக பரவத்தொடங்
கின கூடவே இவை நம் நதிக்கு சொந்தமான தாமரை ,அல்லி,
குளிதாமரை etc போன்ற நீர்
தாவரங்களை அழித்துவிட்டன.
அதோடு மணல் இல்லாமல் போனதால், தாமிரபரணிக்கு
உரிய தண்ணீரின் ருசியும்
கெட்டுப் போய்விட்டது.
இது இப்படி இருக்க சமீபத்
தில் பெய்த வரலாறு காணாத
தாமிரபரணியின் மழைவெள்ளம்
ஒரு பக்கம் நமக்கு பல இன்னல்
களைத் தந்தாலும், நதியில் கணக்கில் அடங்காத மணலை
புன்னக்காயல் வரை (பல லட்சம்
டன்) நதி தன்னகத்தே சேர்த்து
வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மட்டுமின்றி தாமிரபரணியின் உபநதிகளான சிற்றாறு, பச்சை
ஆறு, கொடுமுடியாறு, கரமனை
ஆறு, கோரையாறு, கோதையாறு
நம்பியாறு, குண்டாறு, கருமேனி
யாறு, மணிமுத்தாறு, கடனாநதி,
ராமாதி,அனுமன்நதி,கருப்பாநதி
etcமற்றும்காட்டாறுகள்,சிறு பெரு
ஓடைகள் என இவைகளில் கட்டுக்கடங்காத மணலை வெள்
ளம் சேமித்து தந்துள்ளது. இது
நமக்கு ஒரு பொக்கிஷமாகும்.
கடந்த 80 முதல் 100 ஆண்டு
களில் இல்லாத அளவிற்கு மணல் ஆறுகளில் சேர்ந்துள்
ளது என்பதை 80 வயதைக் கடந்த
வயதானவர்களின் வாய்மொழி
யில் அறிய முடிகிறது, அதோடு
கண்கூடாக காணமுடிகிறது.
இப்படி ஆறு சேமித்த மணலை இனியாவது கட்டுக்கோப்புடன்,
எதிகால சுற்றுச்சுழலின் நன்மை
கருதி அவற்றை பாதுகாப்பது
அரசின் கடமை மட்டுமல்ல, நாம்
ஒவ்வொருவருடைய கடமையும்
உரிமையும் ஆகும்.
தாமிரபரணி அதன் அழிவி
லிருந்து மீட்டெடுக்க இயற்கை தந்த வரமான இம்மணலை பாது
காப்போம் என சூழுரைப்போம்.
வாழ்க தாமிரபரணி…..!
“கிரிக்கெட்மூர்த்தி”
Asst. Director of Statistics (Rtd)
தூய்மைப்பணி
ஒருங்கிணைப்பாளர்
விக்கிரமசிங்கபுரம்


