ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய தலைமை காவலர் சற்குணம் பணியின் போது வாகன விபத்தில் சிக்கியதில் தனது இடது கையில் முறிவு ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த சக காவலர்கள் அவரை அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை திருநெல்வேலியில் சேர்த்தனர். அவர் அங்கே உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் உடனே தலைமை காவலர் சற்குணம் அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி மற்றும் உதவிகள் ஏதும் தேவை என்றால் உடனே செய்து தருவதாகவும் கூறினார்.
உடன் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி ராஜ் அவர்களும் இருந்தார்.


