ஆறாம்பண்ணை ஊர் பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இருந்து புதிய வழித்தட பேருந்து துவக்க விழா நடைபெறுகிறது.
ஆறாம்பண்ணையில் இருந்து அரபாத் நகர் பாலம் வழியாக கருங்குளம், செய்துங்கநல்லூர் மற்றும் கிருஷ்ணாபுரம் வழியாக திருநெல்வேலி சந்திப்பு வரை செல்லும் புதிய பேருந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மண்ணின் மைந்தர் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் சிபாரிசின் பேரில்,துவங்க உள்ளது. ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர் அவர்களின் இடைவிடாத தொடர் முயற்சியாலும் ஆறாம் பண்ணைக்கு புதிய பேருந்து துவங்க உள்ளது.


